முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பிரதியமைச்சர் குற்றவாளி
பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக காணப்பட்டார்.
குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி சாந்த பிரேமரத்ன முன்வைத்த மேன்முறையீட்டை நிராகரித்த சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் (Johnston Fernando) சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் நேற்றைய தினம் (04) கொழும்பு (Colombo) கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |