முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Ministry of Education Akila Viraj Kariyawasam Bribery Commission Sri Lanka
By Sathangani Aug 05, 2026 11:03 AM GMT
Report

புதிய இணைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும்18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் முன்னிலையானன நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


இரண்டாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.   

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரசாங்கத்திற்கு நிதி இழப்பு 

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட நான்கு ஊழியர்களை அகில விராஜ் கரியவசம் தனது தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Ex Education Min Akila Viraj Appears Before Ciaboc

அவர்களில் மூவர் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஊழியர் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதன்படி, ஊழியர்கள் தங்களது அலுவலக பணிகளுக்குத் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர்களுக்குச் சம்பளம் மற்றும் படிகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு 2,768,836.14 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.


முதலாம் இணைப்பு

முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (05) அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து

அதிகாலையில் தீ வைக்கப்பட்ட சொகுசுப் பேருந்து

வீடொன்றின் மீது குண்டு வீச்சு : பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்து வெளியான தகவல்

வீடொன்றின் மீது குண்டு வீச்சு : பாதாள உலகக் குழுவின் தொடர்புகள் குறித்து வெளியான தகவல்

மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு: விசாரணைகள் தீவிரம்

மஹர சிறைக்கலவரத்திற்கு வெளியாட்களின் ஒத்துழைப்பு: விசாரணைகள் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026