மனுஷ நாணயக்காரவின் செயலாளருக்கு பிணை
புதிய இணைப்பு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஷான் யஹம்பத் குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல உத்தரவிட்டார்.
அதன்படி, சந்தேக நபரை தலா 2.5 மில்லியன் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் (Manusha Nanayakkara) தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (22.07.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
