மேர்வின் சில்வா பிணையில் விடுதலை
Gampaha
Mervyn Silva
Court of Appeal of Sri Lanka
By Thulsi
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா (Mervyn Silva) உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பஹா (Gampaha) மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. கே. டி. விஜயரத்னவால் இன்று (03.07.2025) குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா, ஜயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரகோன் ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டது.
வெளிநாட்டுப் பயணத் தடை
குறித்த மூவரும் தலா 200,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மூவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
