வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..!
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு ஒன்று கூட இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபோது நடந்த உரையாடல் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்போது, அங்கிருந்த அரசியல்வாதிகள் குழுவிற்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
ஆச்சரியப்பட்ட அதிகாரிகள்
அந்த குழுவில் வஜிர அபேவர்தன, முகமது முசம்மில், நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மனுஷ நாணயக்கார, நிஷாந்த ஸ்ரீ வர்ண சின்ஹா மற்றும் பலர் இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அங்கு முதலில் பேசத் தொடங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடமிருந்து தனக்கும் அழைப்பாணை வந்ததாகக் கூறியுள்ளார்.
பின்னர் நடந்த விசாரணையில் தனக்கு வங்கிக் கணக்கு இல்லை என்று சொன்னதாகவும் அதற்கு ஆச்சரியப்பட்ட அதிகாரிகள் ஏன் வங்கிக் கணக்கு இல்லை என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கை
அத்தோடு, அது தனக்கு ஓர் பிரச்சினை இல்லை என்றும் அதிகாரிகளையும் அதனை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என தான் கூறியுதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வஜிர சொன்ன கதையைப் கேட்டு அங்கிருந்த பலரும் சிரித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது குறித்து விசாரிக்க வஜிர அபேவர்தனவுக்கு நாங்கள் தொடர்பு கொண்டும் அவரை அடைய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
