விபத்துக்குள்ளான சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை செலுத்தினார் முன்னாள் எம்.பி
மேல் மாகாண சபைக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை பயன்படுத்திய போது விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான (Sahan Pradeep Withana) நட்ட ஈட்டை செலுத்தியுள்ளார்.
இதனடிப்படையில், அவர் கடந்த 24 ஆம் திகதி மாகாண சபைக்கு 53.38 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாக மேல் மாகாண சபையின் (Western Provincial Council) செயலாளர் தம்மிக்க கே.விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்த போது மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் பயன்படுத்திய சொகுசு கார் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.
அதி சொகுசு கார்
இவ்வாறு பெறப்பட்ட இந்த அதி சொகுசு கார் 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பத்தரமுல்லை பெலவத்தை இசுருபாயவிற்கு அருகில் விபத்துக்குள்ளானதுடன் அந்த வாகனத்திற்காக சுமார் 13 மில்லியன் ரூபா காப்புறுதிப் பலன்களாகப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அந்த வாகனத்தை திருத்துவதற்கு தேவையான எஞ்சிய பணத்தை மேல் மாகாண சபையை வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான கோரிய போதிலும், எஞ்சிய பணத்தை மேல்மாகாண சபை செலுத்த மறுத்ததாக செயலாளர் தம்மிக்க கே.விஜேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[OXXYIFS ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |