மோட்டார் வாகன திணைக்கள முன்னாள் ஆணையாளர் கைது
புதிய இணைப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் உட்பட 3 பேரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று (01) சிறை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அவர் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கமை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
