மகிந்தவின் மைத்துனர் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மைத்துனரும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவை (Nishantha Wickramasinghe) பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நிஷாந்த விக்ரமசிங்க கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
மூன்று சரீரப் பிணைகள்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபருக்கு ட்டுப் பயணத் தடையும் விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

