கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு போட்டிப்பரீட்சை!
எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மூவாயிரம் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக பரீட்சைகள் இடம்பெறவிருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற புதிய கிராமம் - புதிய நாடு என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சிறப்புத் தகுதி அடிப்படையில்
மேலும் பரீட்சைகள் முடிவடைந்து மூன்று மாதங்களுக்குள் அந்த நியமனங்கள் அனைத்தும் இறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
[H2Q91
கிராம சேவை அலுவலர் வெற்றிடங்கள் உள்ள தொலைதூரப் பகுதிகளில், சிறப்புத் தகுதியின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படலாம்,எனவும் அவர் தெரிவித்தார்.
துரித அபிவிருத்தி
மேலும் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களையும் மேம்படுத்தி துரித அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல தொழில்நுட்ப உதவி மற்றும் இயந்திரங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் கூறினார்.
அதுமாத்திரமல்லாமல் நகர்ப்புற சூழலுக்கும் கிராமப்புற சூழலுக்கும் இடையிலான சேவை அமைப்பை மாற்றுவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது,என்பதையும் அவர் குறிப்பிட்டார்.