அதிபர்களுக்கு விடுக்கப்பட்ட கல்வியமைச்சின் காலக்கெடுவிற்கு கடும் எதிர்ப்பு!
sri lanka
exam
education ministry
teachers union
By Kalaimathy
அதிபர்களுக்கு கல்வியமைச்சு விதித்த காலக்கெடுவிற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால், அதற்கான பொறுப்பை அதிபர்கள் ஏற்க வேண்டும் என்ற கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.