சாதாரண தர பரீட்சை 2ம் கட்ட மதிப்பீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (Ordinary Level Examination) இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (27.06.2024) ஆரம்பிக்கவிருந்த பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆரம்பிக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் (Department of Examinations) தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்
இதேவேளை, ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் முன்னெடுத்த போராட்டத்தை கலைப்பதற்காக நேற்று காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றும் (27) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்திருந்தார்.
இதேவேளை நாட்டில் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் இன்றைய தினம் (27) வழமை போன்று இயங்கும் என கல்வியமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |