உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு அனுமதி அட்டையினை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் பரீட்சார்த்திகள் தங்களுக்கு தேவையான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள்
மேலும் 2023இற்கான பரீட்சைகளை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தவிரவும், உயர்தரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29 ஆம் திகதி) நள்ளிரவுக்குப் பின்னர் மேற்கொள்ள முடியாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |