ஸ்மார்ட்போன் பாவனை தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அதிக அளவில் ஸ்மார்ட்போன் (smartphone) பயன்படுத்துவதால் ஆண்களை விட பெண்களின் மனம் நலம் பாதிக்க கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் தற்போது அனைவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.இளைஞர்கள் ஸ்மார்ட்போனின் பாவனையில் அதிகம் மூழ்கிக்கிடக்கிறார்கள்.
இவ்வாறு ஸ்மார்ட்போன் பாவனையின் அதிகரிப்பால் ஆபத்துக்களும் அதிகரிக்கின்றது.
ஆய்வு நடவடிக்கை
இதன் பாவனையால் ஏற்படும் ஆபத்து குறித்து சமீபத்தில் ஸ்பெயின் (Spain) நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .
ஆய்வின் முடிவில் அதிக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் பாவனை
மேலும் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும், ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் பதற்றத் தன்மை அதிகரிப்பதாகவும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இளைய தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மாற்று வழியிலான ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
