யாழ்.ஊர்காவற்துறையில் காலாவதி பொருட்கள் விற்பனை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நான்கு வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு தண்டப்பணமும் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்தமை, நலத்துக்கொவ்வாத வகையில் களஞ்சியப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த வியாபார நிலையங்களுக்கு வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில் குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (12.11.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிமன்றின் உத்தரவு
வழக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மொத்தமாக 72 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் ஐந்து வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |