சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு : விளக்கமளித்த சுங்கத் திணைக்களம்

Ministry of Finance Sri Lanka Sri Lanka Customs Import
By Sathangani Jun 08, 2025 07:42 AM GMT
Report

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கிடமான எதுவும் கொண்டு வரப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட (Seevali Arukgoda) தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் (Sri Lanka Customs) இன்று (08) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன்களில், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், நூல் வகைகள், இரசாயனப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், விலங்கு உணவு, இயந்திர வகைகள், பூச்சிக்கொல்லிகள், சீமெந்து, இரும்புக் குழாய்கள், உரம், பலகை போன்றவைதான் இருந்தன.

கதிரைக்கு அடிபடும் தமிழ் தேசியம் - யார் சுத்துமாத்து...! கஜேந்திரகுமாருக்கு என்ன தகுதி

கதிரைக்கு அடிபடும் தமிழ் தேசியம் - யார் சுத்துமாத்து...! கஜேந்திரகுமாருக்கு என்ன தகுதி

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள்

இந்தக் கொள்கலன்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவை. இதுதவிர, இந்தோனேசியா, ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலிருந்தும் இந்தக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு : விளக்கமளித்த சுங்கத் திணைக்களம் | Explanation Release Of Controversial Containers

இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும்போது நாங்கள் பின்பற்றிய நடைமுறைகளால், இறக்குமதியாளர்கள் சுங்கத்திற்கு அறிவித்த பொருட்கள் மட்டுமே இந்தக் கொள்கலன்களில் இருந்தன என நாங்கள் நம்புகிறோம்.

இந்தப் பொருட்களை விடுவிக்கும் இறக்குமதி ஆவணங்களில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பரிசோதித்த பின்னரே இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

கடந்த காலத்தில் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆயுதங்கள் இருக்கலாம், தங்கம் இருக்கலாம், அல்லது போதைப்பொருள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், நாங்கள் பின்பற்றிய இந்த நடைமுறைகளால், இந்தக் கொள்கலன்களில் அவை எதுவும் இல்லை என நம்பிக்கையுடன் கூற முடியும்.

வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)

வெளிநாடொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு : உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை (காணொளி)

நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு

எவ்வாறாயினும், இது தொடர்பாக பெரும் விவாதம் எழுந்துள்ளதால், இலங்கை சுங்கத் திணைக்களம் இதற்காக ஒரு பிந்தைய தணிக்கை (Post-Clearance Audit) நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக பிந்தைய முடிவு பிரிவு ஏற்கனவே தணிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நிதி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு ஒன்று இந்த முழு செயல்முறையையும் விசாரித்து வருகிறது. சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இந்தக் குழுவிடம் சென்று விளக்கங்களை அளித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு : விளக்கமளித்த சுங்கத் திணைக்களம் | Explanation Release Of Controversial Containers

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் நாங்கள் விபரங்களை வழங்கியுள்ளோம். எனவே, எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இந்தக் கொள்கலன்களை விடுவிக்கும் செயல்முறையில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் உத்தரவு அல்லது அழுத்தம் எதுவும் ஏற்படவில்லை. அதை நான் உறுதியாகக் கூற முடியும்.

2025 ஜனவரி 18 அன்று விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாகவே இந்த விவாதம் எழுந்தது. அன்று விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் 180 இறக்குமதியாளர்கள் இருந்தனர். இவர்களிடமிருந்து 234 சுங்க ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தன.

சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்

அதன் மூலம் நாங்கள் 309 கொள்கலன்களை விடுவித்துள்ளோம். மொத்தம் 371 கொள்கலன்கள் இருந்தன. அதில் 62 கொள்கலன்கள் எங்கள் தரவு முறைமை மூலம் தானாக விடுவிக்கப்பட்டவை. மீதமுள்ள 309 கொள்கலன்களை இந்தக் குழு மூலம் விடுவித்தோம்.

அந்த இறக்குமதியாளர்களின் அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன. அவர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் ஒரு நிறுவனமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் குழு யார், இவற்றை விடுவித்தவர்கள் யார் என அனைத்து விபரங்களும் எங்களிடம் உள்ளன.

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு : விளக்கமளித்த சுங்கத் திணைக்களம் | Explanation Release Of Controversial Containers

மேலும், கொள்கலன் எண்களும் எங்களிடம் உள்ளன. இந்த அனைத்து விபரங்களையும் தேவையான இடங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். நாங்கள் ஆபத்து முகாமைத்துவ முறைமை மூலமாகவே எவற்றைப் பரிசோதிக்க வேண்டும், எவற்றைப் பரிசோதிக்கத் தேவையில்லை எனத் தீர்மானிக்கிறோம்.

முன்னர் கூறியது போல, 60% கொள்கலன்களை நாங்கள் பரிசோதிக்காமல் விடுவிக்கிறோம். ஒரு கொள்கலனை பரிசோதிக்காமல் விடுவிப்பது சுங்கத்திற்கு புதிய விடயமல்ல. இதுதான் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, எதிர்காலத்திலும் நடக்கும். இந்த ஆபத்து அடிப்படையிலேயே நாங்கள் தீர்மானங்களை எடுக்கிறோம்." என தெரிவித்தார்.


கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர வைக்கும் செம்மணிப் புதைகுழி

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள் : அதிர வைக்கும் செம்மணிப் புதைகுழி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025