ஹட்டனிலும் பதிவாகிய வெடிப்புச் சம்பவம்! காவல்துறையினர் வெளியிட்ட காரணம்
Police
Gas Cylinder
SriLanka
Hotton
By Chanakyan
ஹட்டன் மல்லியப்பு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை எனவும் எனினும் சமையலறையிலிருந்த அதிகளவான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் எரிவாயு கொண்டு பயன்படுத்தப்படும் அடுப்புக்கும் சிலிண்டருக்கும் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் வயர் பகுதியிலேயே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகளவிலான அழுத்தத்தினால் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 1 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்