எரிபொருள் விலை குறைப்பு : அமைச்சர் பிமல் வெளியிட்ட அறிவிப்பு
உலக சந்தையில் தற்போதைய எரிபொருள் விலைகள் இதே நிலையில் நீடித்தால், ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விற்பனையில் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலைமை குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
ஏற்கனவே அரசாங்கம் வழங்கும் மானியம்
அரசாங்கம் ஏற்கனவே ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 100 மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 20 மானியம் வழங்கி வருவதாகக் கூறினார்.

பொதுச் சந்தையில் பொருட்களை வாங்குவது போல எரிபொருளை உடனடியாக வாங்க முடியாது என்றும், முறையான கேள்வி கோரல் நடைமுறைகளின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட விலையில் அதைப் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எண்ணெயிலிருந்து லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை அரசுக்கு இல்லை. எண்ணெய் விலையை கூடிய விரைவில் குறைக்க வேண்டும் என்றும் நாங்கள் உண்மையாகவே கோரிக்கை விடுத்துள்ளோம்.'
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |