கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கள்ளு; இலங்கை கலால் திணைக்களம் அறிவிப்பு!
இலங்கையில் இருந்து கனடாவிற்கு பனங்கள்ளு மற்றும் தென்னங்கள்ளு போன்றவற்ற ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பொருளாதார நிலைப்படுத்தல் உபகுழுவின் கலந்தாய்வுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சுங்கத்திணைக்களம், கலால் வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கனடாவிக்கு ஏற்றுமதி
இலங்கையின் எத்தனோல் தேவைக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும் கள்ளு உற்பத்தியினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இந்த கூட்டத்தின் முடிவில் கலால் வரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, இலங்கையில் தயாரிக்கப்படும் பனம் கள் மற்றும் தென்னம் கள் போன்றவற்றை கனடாவுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.