சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கொலை அம்பலம் : அதிகாரி உட்பட மூவர் சிக்கினர்
வல்லே சாரங்கவின் மைத்துனரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா இராணுவவத்தைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ வீரர் தான் இணைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து தப்பிச் செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லே சாரங்கவின் மைத்துனர் சுட்டுக்கொலை
கடந்த 21ஆம் திகதி, ராகம, மஹாபா, அலப்பிட்டிவல பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெல்லே சாரங்கவின் மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் துபாய் நிபுனா கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
பிரதான சந்தேக நபர் சிறிலங்கா இராணுவத்தின் மட்டக்களப்பு செங்கலடி முகாமின் நான்காம் கெமுனு ஹேவா படையணியில் சேவையாற்றும் கோப்ரல் தர அதிகாரி ஆவார்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைது
பிரதான சந்தேகநபரை கைது செய்ய காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சென்ற போது மட்டக்களப்பு செங்கலடி முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை பிரதேசத்தில் அவர் தப்பிச் சென்ற போது இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் அவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உளவு பார்த்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹக்மன உடஹவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார். இது தவிர இந்த கொலைக்கு சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தற்போது உயிரிழந்துள்ளதுடன் அவரும் முன்னாள் இராணுவ வீரர் ஆவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |