விரக்தியும் ஊழலையும் வெளிப்படுத்துகின்றது! இந்தியாவிடம் தேரர் விடுத்துள்ள கோரிக்கை
India
Sri Lanka
By Vasanth
இந்தியா ஸ்ரீலங்காவை தனது இன்னொரு மாநிலமாக கருதக்கூடாது என பேராசிரியர் மடகொட அபயதிஸ்ஸ தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கு ஸ்ரீலங்காவில் கட்சிகளை ஆரம்பிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இந்தியா ஸ்ரீலங்காவை தனது மற்றுமொரு மாநிலமாக கருதக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஸ்ரீலங்காவில் தனது அதிகாரமையமொன்றi உருவாக்குவதற்காக தலையிட்டால் அது இந்தியாவின் வெட்கமற்றதன்மையை வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை பெறமுடியாததால் வெளியாகும் இத்தகைய கருத்துக்கள் இந்தியாவின் விரக்தியையும் இந்திய அரசாங்கத்திற்குள் காணப்படும் ஊழலையும் வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.