அரசாங்கத்திலிருந்து வெளியேற்றமா? மைத்திரி இன்று வெளியிட்ட பதில்
goverment
srilanka freedom party
maithiripala sirisena
By Sumithiran
தற்போதைய ஆளும் கூட்டணி அரசிலிருந்து விலகுவதற்கான எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பொலனறுவையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகும் எனஅவர் தெரிவித்தார்.