அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களை அரசிலிருந்து வெளியேற்ற கோரிக்கை
goverment
dilum amunugama
slfp
By Sumithiran
அப்பம் சாப்பிட்டுவிட்டு துரோகம் இழைத்தவர்களான சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அரசின் வெற்றியின் பிரதான பங்காளி சுதந்திரக் கட்சி அல்ல.
எந்நேரத்தில் வேண்டுமானாலும் அக்கட்சியினர் துரோகம் இழைக்கலாம். எனவே, அவர்கள் அரசிலிருந்து பாய்ந்து செல்வதற்கு முன்னர் வெளியேற்றுவதே நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி