தேர்தல் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு : நீடிக்கப்பட்டது கால எல்லை
Election Commission of Sri Lanka
Election
By Jaso
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவடைவதாகவும் எக்காரணம் கொண்டும் அது நீடிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்
முன்னதாக இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அது தற்போது ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்