போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய பல்கலைகழக மாணவன் - மடக்கி பிடித்த காவல்துறையினர்
போலி நாணையத்தாளை கொடுத்து அப்பிள் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் மற்றும் அவரது நண்பன் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (9) அக்கரைப்பற்றில் அப்பிள் கடை ஒன்றில் இவர்களை கைது செய்ததுடன் மூன்று ஜயாயிரம் ரூபா போலி நானையத்தாள்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சோந்த 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் மற்றும் அவரின் நண்பனுடன் இன்று பகல் அக்கரைப்பற்று கல்முனை வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள அப்பிள் கடைக்கு சென்று அப்பிளை வாங்கிவிட்டு 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்றை வழங்கியுள்ளார்.
தப்பி ஓடிய நண்பன்

இதனையடுத்து கடை உரிமையாளர் இது போலியான தாள் என்பதையறிந்து உடனடியாக பல்கலைக்கழக மாணவனை மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததுடன் அவருடன் வந்த நண்பன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனிடம் இருந்து மேலும் இரண்டு 5 ஆயிரம் ரூபா போலி தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.