ஆசிரியர் கலாசாலைக்கு சேலை அணிந்து செல்லாதவர் வெளியேற்றம்:காவல்நிலையத்தில் முறைப்பாடு
Sri Lanka Police
Ceylon Teachers Service Union
By Laksi
கிராகம பிரதேசத்திலுள்ள உள்ள ஆசிரியர் கலாசாலைக்கு இன்று (18) ஞாயிறுக்கிழமை சேலை அணிந்து செல்லாத காரணத்தினால் ஆசிரியை ஒருவரை அங்கிருந்து வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குறித்த ஆசிரியை கடுகண்ணாவ காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
கிராகம ஆசிரிய கலாசாலையில் இன்று (18) ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான தேர்வுக்கு குறித்த ஆசிரியை சேலை அணியாது சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவரால் வெளியேற்றப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எங்களிடம் திறமை உள்ளது: ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை - ஜெய்சங்கர் அதிரடி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி