மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகள்! கஸ்ஸப்ப குழுவை கடுமையாக சாடும் சத்தாரதன தேரர்

Anuradhapura Buddhism
By Dharu Nov 10, 2026 12:53 PM GMT
Report

மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகளை நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என இராஜாங்கணை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுத்த புதிய அரசாங்கத்தின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் பௌத்த மத ஆடையை தவறாகப் பயன்படுத்தும் போலித் துறவிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சில தரப்பினர் தங்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் தேவைகளுக்காகப் பௌத்த சாசனத்தைக் கொச்சைப்படுத்தி வருவதாக அவர் கடுமையாக சாடியுள்ளார்.

தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை

தீபாவளி தினத்தில் வாகன விபத்து: கைது செய்யப்பட்ட மனோ எம்.பிக்கு காவல்துறை பிணை

ஊழல் மற்றும் மோசடி

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் வளங்களைச் சூறையாடி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடனேயே இவர்கள் தற்சமயம் பௌத்த மதத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி மக்களைக் தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.

மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் போலித் துறவிகள்! கஸ்ஸப்ப குழுவை கடுமையாக சாடும் சத்தாரதன தேரர் | Fake Ascetics Hiding Behind Religious Attire

நாட்டின் நிலவிவந்த ஊழல், மோசடி மற்றும் அநீதிகளுக்கு எதிராகவே மக்கள் தங்களின் பேராதரவை வழங்கி புதிய அரசாங்கத்தைப் பலமான பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

தற்சமயம் அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற திருட்டுகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த நிலையில், மதத்தின் பெயரால் இனவாதத்தையோ அல்லது தேவையற்ற மதக் கலவரங்களையோ தூண்டிவிட்டு அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்க நினைக்கும் இத்தகைய சக்திகளுக்கு எதிராகப் காவல்துறையும், சட்டதுறையினரும் எந்தவித அச்சமுமின்றிச் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த கண்டி இராச்சியக் காலத்தில் ஒழுக்கக்கேடான முறையில் நடந்துகொண்ட போலித் துறவிகள் எவ்வாறு சாசனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்களோ, அதேபோல தற்போதும் மத ஆடைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இத்தகைய நபர்களைப் பௌத்த சாசன தூய்மைக்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்”என அவர் கூறியுள்ளார்.

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

A9 வீதி விபத்துக்கு SLTB பேருந்தின் சாரதியே காரணம்: காவல்துறை அறிக்கை

you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023