தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை குறிவைக்கும் போலி மருத்துவர்கள் - மக்களே அவதானம்...
corona
sri lanka
people
By Shalini
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மருத்துவர் என்ற போர்வையில் சென்று மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து கேஸ்பாவ சுகாதார மருத்துவ அதிகாரி நேற்று கேஸ்பாவ பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கேஸ்பாவ - கஹபொல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள வீட்டிற்குச் சென்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் மருத்துவர்கள் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், சமூக ஊடகங்களின் மூலம் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்கள் ரூ .12,500 வசூலித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்