ஷானி அபேசேகரவின் பெயரில் போலி மின்னஞ்சல்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்(CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பெயரில் போலியான மின்னஞ்சல்கள் பரப்பப்பட்டு வருவதாக காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மின்னஞ்சல்கள் சிஐடியால் அனுப்பப்பட்டவையோ அல்லது அனுமதிக்கப்பட்டவையோ அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
சட்ட நடவடிக்கை
noucinatacha20@gmail.com மற்றும் police.cid.lk@gmail.com என்ற முகவரிகளிலிருந்து மேற்படி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெறுநர்களை தவறாக வழிநடத்தி பண மோசடி செய்யவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாகப் பெறவோ முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை அடையாளம் காணவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும், குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும், எந்தவொரு தனிப்பட்ட அல்லது ரகசிய தகவல்களையும் பகிர வேண்டாமென்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |