அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சமரசம் செய்யும் மதுபான விற்பனையாளர்கள்: ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு
போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பாரியளவு மதுபான போத்தல்களை கைப்பற்றுவதற்காக வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகள், கலால் மற்றும் மதுபான உற்பத்தியாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் நேற்று(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சில கலால் திணைக்கள அதிகாரிகளுக்கும் சில மதுபான உற்பத்தியாளர்களுக்கும் இடையில் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறே இந்தச் சுற்றிவளைப்புக்கு இட்டுச் சென்றுள்ளது.
போலி
வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பான தகவல்களோ அல்லது வழக்குகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களோ கலால் திணைக்களத்தால் வெளியிடப்படவில்லை.
ஏனெனில் முறைகேடு செய்யப்பட்ட மதுபான உற்பத்தியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் பின்னர் அதைத் தீர்ப்பதற்கு பணம் கோரவும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்க நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் மேலும் இந்த தவறான உற்பத்தியாளர்களை கலால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள விடமாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கலால்
மேலும் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்களை சந்தைக்கு வழங்குவதற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக பதிவு செய்யுமாறு கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியிடம் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கலால் திணைக்களத்தினால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பெருமளவிலான உள்ளூர் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |