நீடிக்கப்படும் சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம்! வதந்திகளை நிராகரிக்கும் எம்.பி
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவி காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக வெளியாகும் செய்திகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) நிராகரித்துள்ளார்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புக்கமைய, அவ்வாறு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”தேர்தலை பிற்போடுவது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எந்தவொரு பேச்சும் நடத்தப்படவில்லை.
தேர்தல்கள்
தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு செய்யவும் முடியாது. உரிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்படும்.
புதிய அரசியலமைப்பு பற்றி கதைப்பதற்கு தற்போது நேரம் இல்லை. இலங்கையில் நான்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில், அரசியலமைப்பை மாற்றியமைக்க நேரம் இல்லை. அதற்கான மக்களின் அனுமதியை பெறக்கூடிய சூழ்நிலையும் இல்லை.
அச்சம் காரணமாகவே தடையுத்தரவுகளை பெறுகின்றனர். எனக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |