யாழில் போலி உருத்திராச்ச பழங்கள் - வெளியாகியுள்ள எச்சரிக்கை..!
Jaffna
By pavan
யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராக்க பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது என தெரியவந்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள் உள்ளூர்வாசிகளை பயன்படுத்தி குறித்த விற்பனை ஈடுபட்டிருந்ததுடன் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றிருந்த நிலையிலேயே தற்போது இவ்விடயம் அம்பலமாகியுள்ளது
தென்னிலங்கையில் காணப்படுகின்ற நில் வெரழு (Blue Olive) என அழைக்கப்படும் பழங்கள் உருத்திராக்க பழங்களை போலுள்ளதால் அதனை ஏமாற்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உருத்திராட்சை மரம்
உருத்திராட்சம் மரம் இமயமலை சாரலில் தான் வளரும். இலங்கையில் உருத்திராட்சை மரம் இருப்பதாக இன்று வரையும் பதிவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் இவ்வாறான வியாபாரிகளிடம் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு கோரப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி