செவ்வந்தியால் சிறைக்கு சென்ற நபர்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தி குறித்து தவறான தகவல்கள் வழங்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திக்வெல்ல பகுதியை சேர்ந்த லஹிரு சம்பத் என்ற சந்தேக நபரே இவ்வாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்திய கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யத் தேடப்படும் சந்தேக நபரான இஷார செவ்வந்தி குறித்து சந்தேக நபர் தனது தொலைபேசி மூலம் காவல்துறையினருக்கு தவறான தகவல்களை அனுப்பியதாகக் கூறியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன் மூலம் காவல்துறை விசாரணைகளை தவறாக வழிநடத்த அவர் நடவடிக்கை எடுத்ததாக கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல, சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்