வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
police
vavuniya
investigation
body
fond
By Sumithiran
வவுனியா பம்பைமடு குளப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்தநபர் மீன்பிடிப்பதற்காக நேற்று காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் குளத்துப்பகுதியில் தேடியுள்ளனர்.
இதன்போது குளக்கரையில் அவர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
மா.சிவசோதி வயது 58 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்