யாழில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
Jaffna
Jaffna Teaching Hospital
By Jaso
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (28)உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்