ஆற்றில் மீன்பிடித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்
அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை திடீரென முதலை ஒன்று இழுத்துச் சென்ற நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை (04)சம்பவம் நடைபெற்ற நிலையில் நீரின் அளவு அதிகரிப்பு இருளின் மத்தியில் நேற்று இரவு 10 மணி வரை தொடர் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மாயமான இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
இன்று (5) காலை மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாயமான இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒலுவில்-1 அஸ்ரப் நகர்-12 பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் குத்தூஸ் றமீஸ் (வயது-38)ஆவார்.
மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் சம்பவம்
குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு முதலை தாக்கியதால் ஏற்பட்ட மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |