மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
Kumara Jayakody
By Dilakshan
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்கொடி, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தின் படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
30 வீத குறைப்பு
"அவசரப்பட வேண்டாம், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைப்பதாக எங்கள் விஞ்ஞாபன கூறப்பட்டுள்ளது," என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் குமார ஜெயக்கொடி இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி