கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இலங்கையர் கைது
சுமார் ஏழு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா விடுதியை நடத்தும் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரீன்வே வழியாக விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று (07) காலை அவர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி ஊடாக கட்டுநாயக்க வந்தவர்
நீர்கொழும்பில் சுற்றுலா விடுதியை நடத்தும் சந்தேக நபர், ஜா எலவைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.

அவர் தாய்லாந்தின் பாங்கொங்கிலிருந்து இந்தியாவின் புது டில்லிக்கு குஷ் போதைப்பொருளைக் கொண்டு சென்று அங்கிருந்து இன்று காலை 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
07 கிலோகிராம் 070 கிராம் எடையுள்ள இந்த குஷ் போதைப்பொருளை இரண்டு சூட்கேஸ்களில் ,காபன் தாள்களில் சுற்றி, வாயு கசிவைத் தடுக்கும் வகையில் ஏற்பாடு செய்து, அத்தகைய 15 பொதிகளில் மறைத்து வைத்திருந்ததாகவும், அவற்றில் ஏராளமான இனிப்புப் பொதிகளையும் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கை பெண் கொடுத்து அனுப்பிய போதைப்பொருள்
சுங்கத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபரிடம், அவருக்குத் தெரிந்த, தற்போது தாய்லாந்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரால் நாட்டிற்கு கொண்டு வருவதற்காக இந்த போதைப்பொருள் பொதி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக, போதைப்பொருள் பொதியை கொண்டு வந்த பயணியை, கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 17 மணி நேரம் முன்