காடு போன்ற அடர்த்தியான முடி வளர்ச்சி - இந்த ஒரு எண்ணெய் போதும்
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.
இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை பெறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்பாடும் சிறந்த தீர்வாகும்.
தேங்காய் எண்ணெய்
தலைமுடி மிக வேகமாக வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், தேங்காய் எண்ணெயுடன் முட்டையைச் சேர்த்துப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

முட்டையில் புரதம் மற்றும் பயோட்டின் அதிகளவில் உள்ளன. இவை முடியின் கட்டமைப்பை வலுவாக்கி, வேர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன.
ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் இரண்டு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையை உங்கள் உச்சந்தலையிலும் முடியின் நுனி வரை தடவவும். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் வீரியம் குறைந்த ஷாம்பூ கொண்டு அலசவும்.
இது உங்கள் முடிக்கு உடனடி வலிமையையும் பளபளப்பையும் தரும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |