உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி உயிருடன்...! சாரா ஜெஸ்மின் தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சாரா ஜெஸ்மின் உயிரோடு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சாரா ஜெஸ்மின் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே ஆனந்த விஜயபால இதனை கூறியுள்ளார்.
விசாரணைக்கு தடை
மேலும் கருத்து தெரிவித்த அவர், சாரா ஜெஸ்மீன் இந்தியாவில் இல்லை. இது தொடர்பான விசாரணைகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சில முன்னேற்றங்களும் விசாரணைகளில் கிடைக்கப்பபெற்றுள்ளன.
குற்றவாளிகளுக்கான சரியான தண்டனை வழங்கப்படும். அது தொடர்பான தகவல்களை வெளியிடமுடியாத நிலை காணப்படுகிறது. விசாரணைக்கு தடை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் இவ்வாறான தகவல்களை வெளியிடமுடியாது.
மேலம் சாரா ஜெஸ்மின் மரணமடைந்து விட்டதாகவே குறிப்பிடப்பட்டிருந்து. அவர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அவர் தொடர் தீவிர வீசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 14 மணி நேரம் முன்