திருகோணமலையில் அதிகரித்துள்ள கடல் அலைகள்
திருகோணமலை கடற்பரப்பில் இன்று (08.01.2026) அலைகள் சீற்றமாக வீசுவதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளதனால் கடல் அலைகள் இவ்வாறு வீசுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தநிலையில் கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு செல்வதாயின் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலைமை அதிகரிக்கும்
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை இன்று (08) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |