ரஷ்ய இராணுவத்தில் சேரும் பாதாள உலக குற்றவாளி! கசிந்தது தகவல்
இன்டர்போல் பிறப்பித்த சிவப்பு பிடியானையின்படி தற்போது ரஷ்ய பாதுகாப்புப் படைகளின் காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ரொட்டும்ப அமில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ரஷ்ய குடியுரிமையைப் பெறுவதற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி ரஷ்ய இராணுவத்தில் சேர ரொட்டும்ப அமில விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உளவுத்துறைக்கு கிடைத்த சமீபத்திய தகவலின்படி, இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க அவர் இந்த தந்திரோபாயத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்ய படையினரால் கைது
இந்தத் தகவலின் அடிப்படையில், உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் ரஷ்ய குடியுரிமையைப் பெறுவதற்கான ஒரு நுட்பமான திட்டத்தை செயல்படுத்தி வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரஷ்ய இராணுவ சேவையில் சேர்ந்து ரஷ்ய குடியுரிமையைப் பெறுவதே அவரது முதன்மை முயற்சியாக இருந்ததாகவும், இதற்காக ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இன்டர்போலின் தலையீட்டால் ரஷ்ய பாதுகாப்புப் படையினரால் அமில கைது செய்யப்பட்டார்.
மேலும் மார்ச் மாத இறுதியில் ரஷ்ய காவல்துறை இதை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
மேல்முறையீடு
அதைத் தொடர்ந்து, நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டன.

ஆனால் அவர் அதற்கு எதிராக ரஷ்ய நாட்டின் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்துள்ளார், மாத்தறை, ரோடும்பா பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் அமில மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் உளவுத்துறை தகவல்கள் மூலம் இந்த கொலை முயற்சி துபாயில் இருந்து திட்டமிடப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து, 2019 ஆம் ஆண்டு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டில், மாகந்துர மதுஷுடன் துபாயில் நடந்த ஒரு விருந்தில் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரகசிய காவல்துறை பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 17 மணி நேரம் முன்