இன்று அதிகாலை துயரம் : தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு
இன்று வியாழக்கிழமை (19) அதிகாலைவேளை தொடருந்து மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திம்புள்ள – பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கொட்டகலை கங்கைபுரத்தை சேர்ந்த வெள்ளசாமி ஜெயகுமார் (வயது – 40) என்ற ஒரு பிள்ளையின் தந்தை என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரவு நேர தொடருந்தில் மோதுண்டு உயிரிழப்பு
கொட்டகலை தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் கொழும்பில்(colombo) இருந்து பதுளை(badulla) நோக்கி சென்று கொண்டிருந்த இரவு நேர தொடருந்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தொடருந்து நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எப்படி இறந்தார்..! தீவிர விசாரணையில் காவல்துறை
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொடருந்தில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்