எருமை மாடுகளுடன் மோதிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
எருமை மாடுகளுடன் மோதி விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் நேற்றிரவு (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
வவுனியா (Vavuniya) மூன்று முறிப்பு, நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஷ்வரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
எருமைகளுடன் மோதி விபத்து
இவர் கடந்த 27ஆம் திகதி உறவினரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். இதன்போது அறுகம்குளம் பகுதியில் கூட்டமாக சென்ற எருமைகளுடன் மோதி விபத்தில் சிக்கினார்.
வைத்தியசாலையில் அனுமதி
பின்னர் அவரை நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு(28) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
