விவசாயி ஒருவர் சுட்டுக் கொலை - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
எம்பிலிபிட்டிய, பனாமுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட கெம்பனே, அளுத்பர பிரதேசத்தில், குருக்கு வீதியில் உந்துருளியில் பயணித்த 50 வயதுடைய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் இன்று (11) காலை 08.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெம்பனே, களுகலஹேன பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ராஜா தயானந்த என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தனது பிள்ளையை பல்கலைக்கழகத்தில் விட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சுடப்பட்ட இடத்தில் இருந்து பத்து பதினைந்து மீற்றர் தூரம் சென்று உந்துருளியுடன் வீதி ஓரத்தில் விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
