யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: விசாரணைகள் தீவிரம்

Jaffna Journalists In Sri Lanka Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Jun 13, 2024 02:18 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக நான்கு காவல் துறை குழுக்கள் விசேடமாக அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று (13)அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது நள்ளிரவில் தாக்குதல்

வீட்டின் மேல் தாக்குதல் 

"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது. தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: விசாரணைகள் தீவிரம் | Famous Journalist House Attack In Jaffna Police

இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடயங்களை சேகரித்தனர். அத்துடன் காவல்துறை விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெற்றோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தாக்குதல் சம்பவத்தை நடாத்தியவர்கள் 10 லட்சத்துக்கும் பெறுமதியான பொருட்களையும் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீதியூடாக தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன.இவற்றைக் கொண்டு காவல்துறையினர் பல கோணங்களிலும் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: சுகாஷ் கண்டனம்

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: சுகாஷ் கண்டனம்

குறித்த தாக்குதல்

சம்பவத்தை தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகவியலாளரின் ஊடகவியலாளரின் வீட்டிற்கு வருகை தந்து குறித்த தாக்குதல் சம்பவம் ஊடகவியலாளருக்கு அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே குறித்த விடயம் தொடர்பில் அரச தரப்பினர், உரிய அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்: விசாரணைகள் தீவிரம் | Famous Journalist House Attack In Jaffna Police

மேலும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே.சிவஞானம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலே குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரச்சனை தொடர்பில் நேரில் பேசி ஆராயப்பட வேண்டும் வன்முறை என்றும் தீர்வாகாது என்ற கருத்தினை முன் வைத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் குறித்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025