விவசாயிகள் மற்றும் நுகர்வோர் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்துள்ளனர் - சஜித் குற்றச்சாட்டு
Parliament
Sajith Premadasa
SJB
SriLanka
By Chanakyan
விவசாயிகள் மற்றும் நுகர்வோர் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்துள்ளனர் என ஐக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது கட்டளை நியதிகள் சட்டம் 27/2 இன் கீழ் ஒரு கேள்வியை எழுப்பியே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள பொறுப்பற்ற மற்றும் பகுத்தறிவற்ற நடவடிக்கைகளால் நுகர்வோர் மட்டுமன்றி சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் மிகவும் உதவியற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.