நிறுத்தப்படும் உரமானியம்: அதிருப்தியில் விவசாயிகள்
உர மானியம் நிறுத்தப்படும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்த கருத்துக்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
உர மானியத்தை நிறுத்துவதற்கு முன்னர், இந்த ஆண்டு சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அதிக நெல் அறுவடை செய்யப்படும் அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏற்கனவே சிறுபோகத்திற்கான அறுவடை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏராளமான பிரச்சினைகள்
எனினும், அந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக சிறுபோகத்திற்குத் தேவையான உரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று முறைப்பாடளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அறுடையின் தொடக்கத்தில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளதாக மேலும் கூறப்படுகிறது.
[

நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயற்சி: அநுர அரசு மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
