தமிழர் பகுதியில் விவசாயத்தில் புதிய புரட்சி! இலட்சங்களில் வருமானம்
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு பிரதானமானது. உணவிற்கான போட்டி யுத்தங்களையும் தோற்றுவித்துள்ளது.
பெருகி வருகின்ற சனத்தொகைக்கும் பொருளாதார சவால்களுக்கும் ஈடுகொடுத்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவேண்டிய தேவை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு.
நமது நிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விவசாய முயற்சிகள் பற்றி ஆராய்கின்றது இன்றைய காணொளி....
அந்தவகையில் வவுனியாவிலுள்ள ஒரு நிறுவனம் வடக்கு செயலாளர் பிரிவில் 16 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 500 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான உள்ளீடுகள் வழங்கப்பட்டு பப்பாசி மற்றும் மிளகாய் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
30 வருடகாலமாக விவசாயம் செய்யும் விவசாயி ஒருவர் இந்த நவீனமயமான விவசாயமுறை இலகுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் செலவு குறைவாக இருப்பதாகவும், இலட்சங்களில் வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முயற்சிகளின் காரணமாக அதிகளவான நீர் வீண் விரயமாதலை தடுத்தல், குறைந்த இடப்பரப்பில் அதிக விளைச்சலைப் பெறுதல், வினைத்திறனான உற்பத்தி பெருக்கம், சந்தைவாய்ப்புகள் என்பதை விவசாயிகள் அடைய முடியுமென அங்குள்ள இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை பற்றிய முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |