இங்கிலாந்தில் நெகிழ்ச்சி சம்பவம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மகளை கண்டு பிடித்த தந்தை
இங்கிலாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தத்து கொடுத்த தனது மகளை தந்தை கண்டுபிடித்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரைச் சேர்ந்தவர் கெவின் ஜோர்டான். இவர் தனது பள்ளி பருவத்தில் ஜாக்கி என்பவரை காதலித்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பாடசாலை பருவம் முடிந்து திருமணம்
ஆனால் பள்ளி பருவம் என்பதால் அவர்களது பெற்றோர் இதனை அவமானமாகக் கருதினர். எனவே அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழந்தையை தத்து கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகு இருவரும் திருமணம் செய்து குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு ஜாக்கி இறந்தார்.
தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க முடிவு
அதன்பிறகு சிறு வயதில் தத்து கொடுத்த தனது மகளை கண்டுபிடிக்க கெவின் முடிவு செய்தார். இதற்காக தனியார் தொலைக்காட்சி உதவியை நாடினார்.
இந்நிலையில், அவரது மகள் ஹிலாரி என்ற பெயரில் சாலிஸ்பரி அருகே வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர். 50 ஆண்டுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு இங்கிலாந்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
images -bbc
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
