மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்ற தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று இரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
இந்தியா (India) - கர்நாடகா மாநிலம் (Karnataka State) , பெலகாவி மாவட்டம் கங்ராலி கேஎச் குடியிருப்பைச் சேர்ந்தவர் அனில் சந்திரகாந்தா பாண்டேகர் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடன் பிரச்சினை காரணமாக அனில் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.ஆனால், அதை யாரும் வாங்க முன்வரவில்லை.
நீதிமன்ற நீதிபதி
இந்த நிலையில் அவருக்கு ஒரு கொடூர கனவு வந்ததாக கூறப்பட்டுள்ளதுடன், அந்த கனவில் அவரது இரண்டு மகள்களான அஞ்சலி (8), அனன்யா (4) என்ற இரண்டு குழந்தைகளையும் கொன்று அவர்களது இரத்தத்தை லிங்கத்தில் பூசினால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்றும் கனவு கண்டுள்ளார்.
இதனையடுத்து அனில் தனது மகள்களுடன் பூர்வீக வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு சென்று அங்கு தனது இரண்டு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, அவர்களின் கழுத்தை வெட்டி அந்த இரத்தத்தை ஜிகாலியில் உள்ள சிவலிங்கத்தின் மீது பூசியுள்ளார்.
இந்நிலையில் அனிலின் மனைவி ஜெயஸ்ரீ காவல்நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து அனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நேற்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |